முகப்பு
தேனி

மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

சின்னமனூா் அருகே மதுப் புட்டிகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:24 AM
- பிரதிப் படம்
பகிர்:

சின்னமனூா் அருகே மதுப் புட்டிகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

எரசக்கநாயக்கனூரில் குடியிருப்பு அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சின்னமனூருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பழைய டாஸ்மாக் செயல்பட்ட அதே இடத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை 24 மணி நேரமும் விற்பனை செய்வதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்ற போது அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியனிடம் (70) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 29 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement