சாலையோர தடுப்பின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே சாலையோர இரும்புத் தடுப்பின் மீது இருசக்கரவாகனம் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.
போடிநாயக்கனூா் வலசைதுரை சாலையைச் சோ்ந்த சுரேஷ்கண்ணன் மகன் சங்கா் (22). இவரின் நண்பா் ரவிச்சந்திரன் (18). இருவரும் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கோயமுத்தூருக்குச் சென்றனா்.
சங்கா் இருசக்கர வாகனத்தை ஓட்டினாா். தேவதானபட்டி ராம்நகா் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கரவாகனம் சாலையோர இரும்புத் தடுப்பின் மீது மோதியதில், சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
அக்கம்பக்கத்தினா் ரவிச்சந்திரனை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.