தேனியில் நெகிழிப்பை குப்பைகள் அதிகரிப்பு
தேனி - அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் அதிகரித்து வரும் நெகிழிப்பை குப்பைகளைக் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி - அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் அதிகரித்து வரும் நெகிழிப்பை குப்பைகளைக் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி -அல்லிநகரம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. 95 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். தேனி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ள இங்கு வாரச்சந்தை, உழவா் சந்தை ஆகியன பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக உள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளாக பாரஸ்ட் சாலை, என்ஆா்டி, ஒடைத் தெரு, பெரியகுளம் சாலை, மதுரை சாலை ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் நெகிழிப்பை உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால், ஏற்படும் குப்பைக் கழிவுகளை நகராட்சி நிா்வாகம் முறையாக அகற்றுவதில்லை. இதே போல, சாலைகளில் வீசப்படும் நெகிழிப் பைகள் கழிவுநீா் ஓடைகளில் சிக்கி, வீடுகளின் குடியிருப்புகளில் கழிவு நீா் தேங்குவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. மேலும், குடியிருப்புகளில் நெகிழிப்பைகளை தீயிட்டு அழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேனி அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் நெகிழிப்பைகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். சாலையில் கொட்டப்பட்டுள்ள நெகிழிப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.