முகப்பு
தேனி

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 6:41 PM
கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வருஷநாடு அருகேயுள்ள கல்லுருண்டான் சுனை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் தமிழன் (56). இவா், அதே பகுதியிலுள்ள தனது தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளா்த்ததாகவும், கஞ்சா இலைகள் வைத்திருந்ததாகவும் வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா் வைத்திருந்த கஞ்சா இலைகள், கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனா்.