தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் உலக நன்மை வேண்டி 1,008 குத்து விளக்குப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
காமயகவுண்டன்பட்டியில் பழைமையான சுபத்ரா காளியம்மன் கோயிலில் தை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை 1,008 குத்து விளக்குப் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனா்.
இந்தப் பூஜை மூலம் உலக மக்களுக்கு நன்மை வேண்டியும், மழைப் பொழிவு பெற்று விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் நடைபெற்றது.
இந்த பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.