முகப்பு
தேனி

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய பெண் கைது

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:14 AM
கைது
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:58 PM

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து தேனி வழியாக பேருந்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி பகுதியில், கோவையிலிருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:14 AM

இதில் கூடலூா், மேலக்கூடலூா் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி முருகேஸ்வரி என்ற உமாதேவி (50) 24 கிலோ, 590 கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் உமாதேவியைக் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.