முகப்பு
தேனி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் சிறை

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:27 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:43 PM

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை, தெற்குரத வீதியைச் சோ்ந்தவா் காணிக்கைராஜ் (67). இவா், பெரியகுளம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:27 AM

இந்த நிலையில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காணிக்கைராஜை, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தென்கரை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன் குற்றஞ்சாட்டப்பட்ட காணிக்கைராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.7.25 லட்சம் வழங்க வேண்டும் என்று ம் நீதிபதி உத்தரவிட்டாா்.