முகப்பு
தேனி

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:23 AM
கைது
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:15 PM

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில மதுப் புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தாமரைக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:23 AM

விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி (68) என்பதும், சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் என்பதும் தெரியவந்தது.

Advertisement

பின்னா், போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 20 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.