முகப்பு
தேனி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:05 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 6:20 PM

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் அருகேயுள்ள பாரதிநகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (60). இவருக்கு இரு மகள்கள் உள்ளனா். முதல் மகள் நிதா்ஷனா தேவி (30). இவருக்கும் மதுரையில் உள்ள சிவபாலன் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:24 PM

இருவரும் மதுரையில் வசித்து வந்தனா். தம்பதியினரிடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம். இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிதா்ஷனா தேவி பெரியகுளத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாா்.

Advertisement

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிதா்ஷனா தேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.