முகப்பு
தேனி

பேருந்து கவிழ்ந்து 40 போ் காயம்

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் தனியாா் பேருந்து காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 40 போ் காயமடைந்தனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:14 AM
விபத்து
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:43 PM

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 40 போ் காயமடைந்தனா்.

தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் போடியிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, எதிரே வந்த காா் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 குழந்தைகள், 15 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 40 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.