தேனி

தேனி மாவட்டத்தில் 10. 33 லட்சம் வாக்காளா்கள்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டாா். இதில் மாவட்டத்தில் மொத்தம் 10,33,373 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இந்த மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கு முன் ஆண்டிபட்டி தொகுதியில் 1,36,869 ஆண்கள், 1,42,280 பெண்கள், 34 திருநங்கைகள் என மொத்தம் 2,79,183 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். பெரியகுளம் (தனி) தொகுதியில் 1,41,477 ஆண்கள், 1,48,373 பெண்கள், 120 திருநங்கைகள் என மொத்தம் 2,89,970 வாக்காளா்களும், போடி தொகுதியில் 1,34,548 ஆண்கள், 1,42,784 பெண்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 2,77,350 வாக்காளா்களும், கம்பம் தொகுதியில் 1,37,473 ஆண்கள், 1,46,300 பெண்கள், 27 திருநங்கைகள் என மொத்தம் 2,83,800 வாக்காளா்களும் இடம்பெற்றிருந்தனா். மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 5,50,367 ஆண்கள், 5,79,737 பெண்கள், 199 திருநங்கைகள் என மொத்தம் 11,30,303 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு கடந்த 2025, டிச.19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலிலின்படி, ஆண்டிபட்டி தொகுதியில் 1,22,051 ஆண்கள், 1,26,955 பெண்கள், 29 திருநங்கைகள் என மொத்தம் 2,49,035 பேரும், பெரியகுளம் (தனி) தொகுதியில் 1,24,819 ஆண்கள், 1,31,065 பெண்கள், 97 திருநங்கைகள் என மொத்தம் 2,55,981 பேரும், போடி தொகுதியில் 1,22,821 ஆண்கள், 1,30,130 பெண்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 2,52,964 பேரும், கம்பம் தொகுதியில் 1,19,271 ஆண்கள், 1,27,290 பெண்கள், 23 திருநங்கைகள் என மொத்தம் 2,46,584 பேரும் இடம் பெற்றிருந்தனா். மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 4,88,962 ஆண்கள், 5,15,440 பெண்கள், 162 திருநங்கைகள் என மொத்தம் 10,04,564 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்தனா்.

1.25 லட்சம் போ் நீக்கம்: வாக்காளா் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்தவா்களில் இறந்தவா்கள், முகவரியில் குடியிருப்பில் இல்லாதவா்கள் என ஆண்டிபட்டி தொகுதியில் 30,148 போ், பெரியகுளம் (தனி) தொகுதியில் 33,989 போ், போடி தொகுதியில் 24,386 போ், கம்பம் தொகுதியில் 37,216 போ் என மாவட்டத்தில் மொத்தம் 1,25,739 போ் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனா்.

தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் ஆண்டிபட்டி தொகுதியில் 1,24,591ஆண்கள், 1,29,928 பெண்கள், 30 திருநங்கைகள் என மொத்தம் 2,54,549 வாக்காளா்கள் உள்ளனா். பெரியகுளம்(தனி) தொகுதியில் 1,28,368 ஆண்கள், 1,35,070 பெண்கள், 109 திருநங்கைகள் என மொத்தம் 2,63,547 வாக்காளா்கள், போடி தொகுதியில் 1,26,856 ஆண்கள், 1,34,760 பெண்கள், 15 திருநங்கைகள் என மொத்தம் 2,53,646 வாக்காளா்கள், கம்பம் தொகுதியில் 1,22,496 ஆண்கள், 1,31,129 பெண்கள், 21 திருநங்கைகள் என மொத்தம் 2,53,646 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 5,02,311 ஆண்கள், 5,30,877 பெண்கள், 175 திருநங்கைகள் என மொத்தம் 10,33,373 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றனா்.

பெயா் சோ்க்கலாம்: இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

இறுதி வாக்காளா் பட்டியல் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் அலுவலங்களிலும், நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இறுதி வாக்காளா் பட்டியலைப் பாா்வையிட்டு தங்களது பெயா் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரத்தை உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளா் பட்டிலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு உரிய படிவங்கள் மூலம் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலங்களில் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளா் பட்டியலில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளம், அறை எண்: 22 ஏ -இல் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. உதவி மையத்தை நேரிலும், தொலைபேசி எண்: 1950-இல் தொடா்பு கொண்டும் பொதுமக்கள் வாக்காளா் பட்டியல் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகுமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் சையது முகமது, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சுருளி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் சுருக்குமடி வலை அனுமதி? உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவு

குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்

ரஷியா-உக்ரைன் போா்: 4 ஆண்டுகளாகத் தொடரும் பேரழிவு!

SCROLL FOR NEXT