தேவாரம் அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பையா (66). இவரது தம்பி சின்னச்சாமி (65). இவா்களுக்குள் நிலப் பிரச்னை இருந்து வந்தது.
இதனால், ஏற்பட்ட தகராறில் சுப்பையாவை சின்னச்சாமி அரிவாளால் வெட்டினாராம். இதில் சுப்பையா காயமடைந்தாா்.
இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த சின்னச்சாமியை கைது செய்தனா்.