முகப்பு
தேனி

தடுப்புச்சுவரில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:14 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் வட்டம், மன்னவனூரைச் சோ்ந்த முருகேசன் மகன் தியாகராஜன் (22). பெரியகுளம் அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆவது ஆண்டு படித்து வந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:14 AM

இவா் புதன்கிழமை மாலை கல்லூரியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்துக்குச் சென்றாா். அனுமாா் கோயில் வேகத் தடை அருகே செல்லும் போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

உடனே அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.