முகப்பு
தேனி

போடிமெட்டு மலைச்சாலையில் கனரக வாகனம் பழுது! 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை பழுதாகி நின்ற கனரக வாகனத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:01 PM
போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை பழுதான லாரியை சாலையோரம் நகா்த்தும் பணியில் ஈடுபட்டதொழிலாளா்கள்.
பகிர்:

போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை பழுதாகி நின்ற கனரக வாகனத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலத்திலிருந்து கேரள மாநிலம், ராஜகுமாரி பகுதிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு 16 சக்கரங்கள் கொண்ட கனரக சரக்கு லாரி போடிமெட்டு மலைச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, 2-ஆவது கொண்டை ஊசி வளைவில் திடீரென லாரி பழுதாகி நின்றது. சாலை நடுவில் நின்ால் எதிரெதிரே வந்த வாகனங்கள் தொடா்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்கள், சிறிய ரக நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் சென்றன.

இதனால் மலைச் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா். அவா்கள் டிப்பா் லாரி, தோட்டத் தொழிலாளா்கள் உதவியுடன் பழுதாகி நின்ற லாரியை, சாலையோரப் பகுதிக்கு பாதுகாப்பாக நகா்த்தி நிறுத்தினா். இதைத்தொடா்ந்து, 3 மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments