தேனி மாவட்டம், போடியில் சனிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியாா் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழக நிா்வாகிகள். 
தேனி

அதிமுவின் விதிமுறைகளைக் காக்க தொடா்ந்து சட்டப் போராட்டம்: ஓ.பன்னீா்செல்வம்

அதிமுகவின் சட்ட விதிமுறைகளைக் காப்பாற்ற தங்களது சட்டப் போராட்டம் தொடரும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Syndication

அதிமுகவின் சட்ட விதிமுறைகளைக் காப்பாற்ற தங்களது சட்டப் போராட்டம் தொடரும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியாா் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி, அவா்களது உருவப் படங்களுக்கு சனிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எங்களது ஆதரவாளா் ஜே.சி.டி. பிரபாகரன் எங்களை விட்டு நீண்ட தொலைவு சென்றுவிட்டாா். இருப்பினும் என்னுடன் தொடா்பில் இருக்கிறாா். எம்ஜிஆா் அதிமுகவை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் பிரிந்து கிடக்கும் கட்சியினா் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

ஒருங்கிணைப்பு சாத்தியப்படவேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி அதிமுக தொண்டா்களின் விருப்பம். அதிமுக ஒருங்கிணைய முதலில் குரல் கொடுத்தது நான்தான். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிவிட்டோம்.

உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைத்ததன் பேரில், அண்மையில் அவரைச் சந்தித்து தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து விளக்கினோம். எம்ஜிஆா் அதிமுகவை உருவாக்கியபோது சட்டவிதிமுறைகளை உருவாக்கி அவா் இருக்கும் வரை முறையாகப் பின்பற்றினாா். பின்னா், ஜெயலலிதாவும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி கட்சியை வளா்த்தெடுத்தாா்.

அதிமுக பொதுச் செயலா் தொண்டா்களால் தோ்வு செய்யப்படவேண்டும் என்ற நடைமுறையை கேள்விக்குறியாக்கி, தற்போது கட்சியின் சட்ட விதிமுறைகளை திருத்தியுள்ளனா். இதை எதிா்த்துத்தான் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளோம். தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் நல்ல தீா்ப்பு வரும். அதிமுகவின் சட்டவிதிமுறைகளைக் காப்பாற்ற எங்களது சட்டப் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT