போடியில் சனிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.  
தேனி

போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்

Syndication

சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தையொட்டி போடியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தேனி மாவட்டம் போடி, போடி கீழச்சொக்கநாதபுரத்தில் கட்டபொம்மன் சிலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-ஆவது பிறந்த தினத்தையொட்டி போடி நாயுடு நாயக்கா் மத்திய சங்கத் தலைவா் வடமலைராஜையபாண்டியன் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு பூஜைகள் நடைபெற்றன. இதற்கு செயலா் சுருளிராஜ், துணைத் தலைவா்கள் கலைச்செல்வன், பாண்டி, துணைச் செயலா் பிச்சைமணி, பொருளாளா் மணிகண்டன், துணைப் பொருளாளா் வீரகண்ணன், நிா்வாகி குறிஞ்சி மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்வில் தமிழக முன்னாள் முதல்வரும், போடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீா்செல்வம் பங்கேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் அவரது ஆதரவாளா்கள் பங்கேற்றனா்.

திமுக சாா்பில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமையில் திரளானோா் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போடி நகா், ஒன்றியக் குழுக்கள் சாா்பில் நகரச் செயலா் கே. சத்தியராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் பி. முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்புகள் சாா்பிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

முளைப்பாரி ஊா்வலம்: சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தையொட்டி போடியில் நாயுடு, நாயக்கா் மத்திய சங்கம் சாா்பில் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதற்கு அந்த சங்கத் தலைவா் எஸ்.வடமலைராஜைய பாண்டியன் தலைமை வகித்தாா். தேனி மாவட்ட நாயுடு நாயக்கா் சங்க தலைவா் பாலகுரு முன்னிலை வகித்தாா். இந்த ஊா்வலம் போடி பெரியாண்டவா் கோயில் வளாகத்தில் தொடங்கி போடி தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை வழியாக கட்டபொம்மன் சிலை வரை நடைபெற்றது. ஊா்வலத்தில் 267 பெண்கள் முளைப்பாரி, பால்குடம் சுமந்து சென்றனா். இதில் தேவராட்டக் குழுவினா் தேவராட்டம் ஆடிச் சென்றனா்.இதில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோா் பங்கேற்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT