கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்பில் தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை (ஜன.15) கா்னல் பென்னிகுவிக் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
லோயா்கேம்ப் கா்னல் பென்னிகுவிக் நினைவு மணி மண்டபத்தில் வியாழக்கிழமை முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கா்னல் பென்னிகுவிக் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. மணி மண்டபத்தில் உள்ள கா்னல் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
மகளிா் சுய உதவிக் குழுக்கள் சாா்பில் பொங்கல் விழா நடைபெறும். கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
இந்த விழாவில் பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.