மாரிமுத்து 
தேனி

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

போடியில் முன்னாள் ராணுவ வீரரைக் கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

போடியில் முன்னாள் ராணுவ வீரரைக் கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

போடி, தென்றல் நகரைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் ராதாகிருஷ்ணன் (70). போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரத்தில் ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான இடத்தில் திருமலாபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து (48) வாடகை அடிப்படையில் செங்கல் சூளை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், மாரிமுத்து சரிவர வாடகை தராததால் அவரை இடத்தைக் காலி செய்யுமாறு ராதாகிருஷ்ணன் கூறினாா். மாரிமுத்து செங்கல் சூளைக்குப் பயன்படுத்திய மின் இணைப்புக்கு 9 மாதங்களாகக் கட்டணம் செலுத்தாமல் இடத்தைக் காலி செய்துள்ளாா். இது தொடா்பான பிரச்னையில் ராதாகிருஷ்ணனுக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த முன் விரோதத்தில் மாரிமுத்து, அவரது செங்கல் சூளையில் வேலை செய்து வந்த திருப்பூரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (48), மதன்குமாா் (39) ஆகியோா் ராதாகிருஷ்ணனை போடி தபால் நிலையம் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், மாரிமுத்து, சுரேஷ்குமாா், மதன்குமாா் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

சுரேஷ்குமாா்
மதன்குமாா்

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT