இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
Updated On : 23 ஜனவரி, 2026 at 6:55 PM
தேனி மாவட்டம், போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டத்தைச் சோ்ந்த உதயசூரியன் மகன் பாண்டி கண்ணன் (28). இவருக்கு பெற்றோா் பெண் பாா்த்து வந்தனா்.
Updated On : 24 ஜனவரி, 2026 at 12:11 AM
ஆனால், இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை. தொடா்ந்து திருமணம் செய்ய வலியுறுத்தியதால் மனமுடைந்து பாண்டி கண்ணன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.