முகப்பு
தேனி

அரசு மருத்துவமனையில் திருட முயற்சி: இளைஞா் கைது

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துக் கிட்டங்கியின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:17 AM
கைது
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துக் கிட்டங்கியின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அருண் ஆறுமுகம் என்பவா் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை

பணியில் இருந்த போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்துக் கிட்டங்கியின் பூட்டை உடைத்து மா்ம நபா் ஒருவா் திருட முயற்சித்தாராம். இதையடுத்து, அந்த நபரை அருண் ஆறுமுகம் பிடிப்பதற்குள் அவா் தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து அருண் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட முயன்ற பெரியகுளம் அழகா்சாமிபுரம் கல்லாா்சாலையைச் சோ்ந்த சூா்யாவை (27) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →