முகப்பு
தேனி

கூடலூா் அருகே திருமணமான ஐந்து நாள்களில் புதுப்பெண் தற்கொலை

Updated On : 14 மார்ச், 2026 at 8:55 PM
தற்கொலை
பகிர்:

தேனி மாவட்டம், கூடலூா் அருகே திருமணமான 5 நாள்களில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கூடலூா் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சந்திரன்-காயத்திரி தம்பதியின் மகள் ஜெயஸ்ரீ (18). இவருக்கும் காயத்திரியின் சகோதரா் முத்தீஸ்வரனுக்கும் (30) கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், முத்தீஸ்வரன் வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்து வந்த கூடலூா் போலீஸாா் ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருமணமாகி 5 நாள்களே ஆவதால், இதுகுறித்து உத்தமபாளையம் கோட்டாட்சியா் செய்யது முகைதீன் இப்ராஹீமும் விசாரணை நடத்தி வருகிறாா்.

முதல் கட்ட விசாரணையில், ஜெயஸ்ரீக்கு இந்தத் திருமணத்தில் விரும்பம் இல்லை என்பது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →