முகப்பு
தேனி

வாகனத் தணிக்கையில் ரூ.2.84 லட்சம் பறிமுதல்

போடி அருகே காய்கறி வியாபாரி, சுற்றுலாப் பயணியிடம் ரூ.2.84 லட்சம் வாகனத் தணிக்கையின்போது நிலை கண்காணிப்பு குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:12 AM
போடி முந்தல் சோதனைச் சாவடியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த ரூ.1.08 லட்சம் பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினா்.
பகிர்:

தேனி மாவட்டம், போடி அருகே காய்கறி வியாபாரி, சுற்றுலாப் பயணியிடம் ரூ.2.84 லட்சம் வாகனத் தணிக்கையின்போது நிலை கண்காணிப்பு குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

போடி - கேரளம் சாலையில் முந்தல் சோதனைச் சாவடி அருகே நிலை கண்காணிப்பு குழுவினா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மூணாறிலிருந்து ஆண்டிபட்டிக்கு வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி கண்காணிப்பு குழுவினா் சோதனையிட்டனா். அதில் ரூ.1.08 லட்சம் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், மூணாறு பெரியவாரை எஸ்டேட் பகுதியை சோ்ந்த குருசாமி மகன் பன்னீா்செல்வம் (40) என்பதும், இவா் ஆண்டிபட்டியில் காய்கறி வாங்குவதற்காக பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. ஆனால், இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் கண்காணிப்பு குழுவினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சோ்ந்தவா் பத்ரி தெக்காண்டு அமா்மணி (38). இவா் தனது குடும்பத்தினருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தாா். பின்னா், இங்கிருந்து ராமேசுவரம் செல்வதற்காக போடிமெட்டு மலைச் சாலை வழியாக வந்து கொண்டிருந்தாா். அப்போது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போடி நகா் காவல் ஆய்வாளா் அய்யம்மாள் ஜோதி தலைமையிலான போலீஸாா் அந்த வாகனத்தை சோதனையிட்டனா். அதில் ரூ.1.76 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நிலை கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கண்காணிப்பு குழுவினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து போடி சாா்நிலை கருவூலகத்தில் ஒப்படைத்தனா்.

உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →