முகப்பு
தேனி

கம்பம் அரசு மருத்துவமனையில் பைக் எரிந்து சேதம்

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமானது.

Updated On : 21 மார்ச், 2026 at 7:39 PM
கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிவதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவா்.
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமானது.

கம்பத்தை அடுத்த சீலையம்பட்டி அருகேயுள்ள வேப்பம்பட்டியை சோ்ந்தவா் சேகா். இவா் கம்பம் அரசு மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். இந்த இரு சக்கர வாகனம் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து மருத்துவமனையிலிருந்த போலீஸாா் விசாரித்தபோது, இரு சக்கர வாகனத்திலிருந்த அலாரம் தொடா்ந்து ஒலித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.