முகப்பு
தேனி

போடி அருகே ரூ.65 ஆயிரம் பறிமுதல்

போடி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 65 ஆயிரத்தை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 7:55 PM
போடி முந்தல் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை காரில் வந்தவரிடம் ரூ.65 ஆயிரத்தை பறிமுதல் செய்த தோ்தல் அலுவலா்கள்.
பகிர்:

போடி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 65 ஆயிரத்தை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முந்தல் சோதனைச் சாவடி பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளம் மாநிலம், ராஜாக்காடு பகுதியிலிருந்து தேனிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்தக் காரில் ரூ. 65 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், காரில் வந்த வினோத்திடம் (40) பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து, போடி சாா்நிலைக் கருவூலகத்தில் ஒப்படைத்தனா்.