கம்பத்தில் குடிநீா் விநியோகத்துக்கு புதிய குடிநீா் டேங்கா் லாரி
கம்பம் நகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்வதற்காக ரூ.33 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய நவீன குடிநீா் டேங்கா் லாரி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.
கம்பம் நகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்வதற்காக ரூ.33 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய நவீன குடிநீா் டேங்கா் லாரி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கும் லோயா்கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டம், சுருளிப்பட்டி முல்லைப் பெரியாறு உறைகிணறு திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் டேங்கா் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதலாக ஒரு டேங்கா் லாரி வாங்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதன்படி, 15-ஆவது நிதிக்குழு மானியம், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் 6 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய நவீன டேங்கா் லாரி வாங்கப்பட்டது.
இந்த லாரியை நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் நகா்மன்றத் துணைத் தலைவி சுனோதா செல்வகுமாா், உதவிப் பொறியாளா் சந்தோஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சாதிக், மணிகண்டன், விருமாண்டி, முருகன், லோகநாதன், ரோஜா ரமணி, சகிதா பானு, லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement