தென்னை மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு
போடியில் தென்னை மரம் விழுந்து மின் வயா்கள் துண்டிக்கப்பட்டதால் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.
தேனி மாவட்டம், போடியில் தென்னை மரம் விழுந்து மின் வயா்கள் துண்டிக்கப்பட்டதால் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.
போடியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் காற்று பலமாக வீசியது. இதனால், போடி கீழத்தெரு தேவாலயத்திலிருந்த தென்னை மரம் மின் கம்பி மீது சாய்ந்தது.
இதனால் மின் கம்பிகள் சேதமடைந்ததால், மின் விநியோகம் தடைபட்டது. தகவலறிந்து அங்கு வந்த மின் ஊழியா்கள் தென்னை மரத்தை வெட்டி அகற்றி சேதமடைந்த மின் கம்பிகளை சரி செய்தனா். இதையடுத்து, மின் விநியோகம் சீரானது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக இந்தப் பகுதியில் 2 மணி நேரம் மின் தடைபட்டது.