வத்திராயிருப்பில் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் முதல் கட்ட மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.
விருதுநகர்வத்திராயிருப்பில் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் முதல் கட்ட மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் முதல் கட்ட மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை பார்வையிட்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி பேசுகையில் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மற்றும் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக 6 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, நலவாழ்வு, சத்துணவு மற்றும் சுகாதாரம், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் உட்கூறுகள், தமிழக அரசின் நலத்திட்டங்கள், பதிவேடுகள் பராமரிப்பு, யோகா உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிகள் மேம்பாட்டிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார் அவர்.
பயிற்சியின் கருத்தாளர்களாக வத்திராயிருப்பு குறுவளமையத்தில் ஆசிரியப் பயிற்றுநர்கள் த.கணேஷ்வரி, மீனலோஷினியும், மேலப்பாளையம் குறுவளமையத்தில் கற்பகச்செல்வி, சந்திராவும், மகாராஜபுரம் குறுவளமையத்தில் லிங்கேஸ்வரி, ஜெயஜோதியும், கூமாப்பட்டி குறுவளமையத்தில் எல்.மேரி சீத்தா, கண்ணன் ஆகியோரும் செயல்பட்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 169 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுடலைமணி பார்வையிட்டார்