முகப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
உலகம்

அமெரிக்காவிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன; எப்போதும் போரிட முடியும்! டிரம்ப் மிரட்டல்!!

அமெரிக்காவிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளதாகவும், எப்போதும் போரிட முடியும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

உலகம்

அமெரிக்காவிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன; எப்போதும் போரிட முடியும்! டிரம்ப் மிரட்டல்!!

அமெரிக்காவிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளதாகவும், எப்போதும் போரிட முடியும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

Updated On : 3 மார்ச், 2026 at 8:00 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
பகிர்:

அமெரிக்காவிடம் வரம்பில்லாத அளவுக்கு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் எப்போதும் போரிட முடியும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டும் வகையில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் சேர்த்து கடந்த சனிக்கிழமை (பிப். 28) நடத்திய அதிரடி கூட்டுத் தாக்குதலில் உச்சத்தலைவர் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகமும் சேர்த்து தாக்குதல் நடத்தும் வேளையில், சற்றும் சளைக்காத ஈரான் தொடர்ந்து சௌதியின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது இன்று (மார்ச் 3) காலை ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அமெரிக்காவின் வெடிமருந்து ஆயுதக் கிடங்குகள் நடுத்தர மற்றும் உயர் நடுத்தரத்தில் ஒருபோதும் உயர்தரமாகவோ, சிறந்ததாகவோ இருந்ததில்லை. ஆனால், இன்று எங்களிடம் வரம்பற்ற அளவில் ஆயுதங்கள் இருக்கின்றன.

எங்களிடம் இருக்கும் ஆயுதங்கள் மற்ற நாடுகளில் இருப்பதைவிட மிகவும் சிறந்தவை. இந்த ஆயுதங்களப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும், யாருடனும் எங்களால் போரிட முடியும். எங்களிடம் ஆயுதங்களுக்கான விநியோகம் இருக்கிறது. ஆனால், தேவையான அளவுக்கு இல்லை. எங்கள் நாட்டுக்கு வெளியே உயர்தரமான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் (முன்னாள் அமெரிக்க அதிபர்) அவரின் ஆட்சிக் காலத்தில், நாட்டின் பணத்தை தேவையின்றி பயன்படுத்தி உக்ரைனின் பி.டி. பர்னம்-ஆன தற்போதைய அதிபர் ஸெலென்ஸ்கியிடம் கொடுத்துக் கொண்டிருந்தார் [பி.டி. பர்னம் அமெரிக்காவில் சர்க்கஸ் நடத்திக் கொண்டிருந்தவர்].

பல பில்லியன் டாலர்களை ஜோ பைடன் வீணடித்தார். நல்ல வேளையாக நான் அமெரிக்க ராணுவத்தை மறுகட்டமைப்பு செய்து, போர்களில் பெரிய வெற்றி பெற உதவியிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

President Donald Trump has warned that the United States has "virtually unlimited" supply of weapons to fight wars "forever" and "successfully." Trump's remarks come at the cusp of the Israel-Iran war being fought with the US support.

முழு கட்டுரையைப் படிக்க →