உலக புத்தக தின விழா கட்டுரைப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பரிசு வழங்கினார்
விருதுநகர் மாவட்டத்தில், பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கடந்த வாரம் மைய நூலக அலுவலக வளாகத்தில் என்னை
மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில், பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கடந்த வாரம் மைய நூலக அலுவலக வளாகத்தில் என்னை செதுக்கிய நூல்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அதில், 40-பேருக்கும் மேற்பட்டோர் வரையில் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது,.
இப்போட்டியில், பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 11-வது வகுப்பு மாணவி ஆர்.கலைச்செல்வி முதல் பரிசாக ரூ.1000ம், இரண்டாம் பரிசாக வாசகர் பி.மேரிகேத்தரின் என்பவருக்கு ரூ.500ம், ரூ.350 மூன்றாம் பரிசாக மூளிப்பட்டியைச் சேர்ந்த வாசகர் ராஜராம் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி, மாவட்ட நூலக அலுவலர் சே.ஜெகதீசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
Advertisement