வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் வளர்ச்சி பணிகள் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை வியாழக்கிழமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை வியாழக்கிழமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகளுடன் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கிராமத்தில் சுகாதார வளாகம் பயன்படுத்தப்படுகிறதா எனவும் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதிகள் மற்றும் பசுமை குடியிருப்பு வீட்டு பணிகளை பார்வையிட்டார். அதேபோல், வி.துரைச்சாமிபுரத்திலிருந்து-பூசாரிபட்டி வரையில் நடந்து வரும் சாலைப்பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அதேபோல், துரைச்சாமிபுரத்தில் தாய் திட்டத்தில் நடந்து வரும் பணிகளான சமுதாயக் கூடம், இணைப்பு தார்ச்சாலைகள், கழிவு நீர் வாய்க்கால், வரத்துக் கால்வாய் அகலப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இக்குறிப்பிட்ட பணிகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
Advertisement
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ராம், முனீஸ்வரன் மற்றும் ஒன்றிய மேற்பார்வையாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.