விருதுநகர்

அம்மா திட்டத்தில் 64 பேருக்கு உதவிகள் வழங்கல்

: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் புதன்கிழமை மக்களைத் தேடி வருவாய்த் துறையினர் என்ற அம்மா திட்டத்தை காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி துவக்கி வைத்து பயனாளிகள் 64 பேருக்கு உதவிகளை

கல்யாணி வெங்கடராமன்

: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் புதன்கிழமை மக்களைத் தேடி வருவாய்த் துறையினர் என்ற அம்மா திட்டத்தை காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி துவக்கி வைத்து பயனாளிகள் 64 பேருக்கு உதவிகளை வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் இராமமூர்த்தி பேசியதாவது: பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு சென்றுவர வேண்டிய நிலை இதுவரை இருந்தது. ஆனாலும் அவர்களது பணிகள் உடனடியாக முடியும் நிலை இல்லாமல் இருந்தது. 

 இதுபோன்ற காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு கிராமங்களிலேயே இதற்குத் தீர்வு காணும் வகையில் பொதுமக்களை தேடி வருவாய்த்துறை என்னும் அம்மா திட்டத்தை முதல்வர் அறிமுகம் செய்துள்ளார்.

 வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நடத்தும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அவர்களது குறைகளைக் கூறி உடனடியாக தீர்வு காணலாம் என்றார்.

  பிசிண்டி, கிழவனேரி, பந்தனேந்தல் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 216 மனுக்கள் பெறப்பட்டு 64 மனுக்கள் மீது உடனடி

நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

 நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா ரகுபதி, விவசாயபிரிவு செயலாளர் முத்துபாண்டி, வட்டாட்சியர் சுதந்திரமணி, மண்டல துணை வட்டாட்சியர் அய்யாகுட்டி, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT