முகப்பு
விருதுநகர்

ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் ரங்கோலி போட்டி

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த போட்டிக்கு செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இந்தக் கல்லூரியின் முதல்வர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன

Updated On : 4 மே, 2013 at 5:48 PM
பகிர்:

விருதுநகர் ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கான ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது.

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த போட்டிக்கு செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இந்தக் கல்லூரியின் முதல்வர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாண்மை நிர்வாக இயக்குநர்கள் உமாராணி மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் பங்கேற்று ரங்கோலி கோலப்போட்டியை தொடங்கி வைத்தனர்.

இதில், அருப்புக்கோட்டை, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பெண்கள் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்று கோலங்களை வரைந்தனர். இதில், சிறப்பான கோலங்கள் வரைந்த தனலட்சுமிக்கு ரூ.5 ஆயிரம் முதல் பரிசும், கனக விஜயராணிக்கு ரூ.3 ஆயிரம் இரண்டாவது பரிசும் மற்றும் ஜெயகலாவிற்கு ரூ.2 ஆயிரம் முன்றாம் பரிசாகவும் வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் பாஸ்கரராஜன், துணைத்தலைவர் ராஜரத்தினம், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.