விருதுநகர்

திருச்சுழியில் சிறுதானிய திருவிழா

திருச்சுழியில் சிறுதானிய திருவிழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழியில் சிறுதானிய திருவிழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்பீச் கிராம பேரிடர் பாதுகாப்பு தகவல் மையம், ஆர்.சி.பி.டி.எஸ்., ஆதாரமையம், தட்ப வெப்ப நீதிக்கான குழந்தைகள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் சிறுதானிய திருவிழா, கண்காட்சி, செயல்விளக்க முகாம் உள்ளிட்டவை உடையனாம்பட்டியில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.

குழும தலைவர் முருகேஷ்வரி வரவேற்றார். ஸ்பீச், ஆர்.சி.பி.டி.எஸ்., நிறுவனர் ஜான்தேவவரம் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார்.

விழாவில் ஸ்பீச் திட்ட இயக்குநர் எர்ஸ்கின், பேரிடர் பாதுகாப்பு பயிற்றுநர் அய்யாத்துரை, விவசாய தொழில் நுட்ப மேலாளர் முத்துக்கருப்பன், பஞ்சவர்ணம், சந்தனமகாலிங்கம் ஆகியோர் சிறுதானியத்தின் அவசியம், பயன்பாடு குறித்து பேசினர்.

கண்காட்சியில் சிறுதானிய வகைகள், இயற்கை வேளாண்மை முறைகள் பாரம்பரிய உணவு வகைகள், தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. திருச்சுழி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கண்காட்சியை கண்டுகளித்தனர்.

விழாவில் ஸ்பீச் சி.எம்.சி.ஜே., குழந்தைகள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழா ஏற்பாடுகளை கிராம பேரிடர் பாதுகாப்பு தகவல் மைய அமைப்பாளர் மற்றும் ஆர்.சி.பி.டி.எஸ்., குழந்தைகள் மைய அமைப்பாளர்கள், களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT