விருதுநகர்

பாபர் மசூதி இடிப்பு தினம்: விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

DIN

விருதுநகரில், பாபர் மசூசி இடிப்பை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கருப்பு சட்டை அணிந்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தினர். 
    விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் அஜ்மீர் கான் தலைமை வகித்தார். இதில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாததைக் கண்டித்து கோஷமிட்டனர். 
 மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்,  இடப்பிரச்னையில் ஆவணங்களின் அடிப்படையில் நிரந்தர தீர்வு காண வேண்டும், பாஜக ஆளும் மாநிலங்களில் பசு காவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம் மற்றும் பட்டியல் இன மக்களை படுகொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  இதில், தமுமுக மாநில பொதுச் செயலாளர் நெலஸ்கோ, தலைமை செயற்குழு உறுப்பினர் மில்லத் இஸ்மாயில், மாவட்ட செயலாளர் முகம்மது இப்ராஹிம் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT