விருதுநகர்

விருதுநகர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஒரு வழிப் பாதையாக மாற்ற கோரிக்கை

DIN

விருதுநகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 
 விருதுநகர் பஜார் பகுதியில் ஏராளமான பலசரக்கு கடை, காய்கறி மார்க்கெட், பழக்கடை முதலானவைகள் உள்ளன. சுமார் 60 அடி உள்ள இச்சாலை ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது 30 அடி மட்டுமே உள்ளது. இப்பகுதியில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். இதனால், காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் நெரிசலில் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, தீபாவளிக்கு முன்னர் பஜார் சாலை ஒரு வழி பாதையாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாரியம்மன் கோயில், தெப்பம் தெற்கு பகுதியில் போலீஸார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்க வில்லை. இதனால், பஜார் பகுதியில் போக்குவரத்துநெருக்கடி குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக இப்பகுதி இரு வழி பாதையாக செயல்பட்டு வருகிறது. இதில், கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், மீண்டும் நெரிசல் ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தில் செல்வோர், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பஜார் பகுதியை ஒரு வழி பாதையாக மாற்ற போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT