முகப்பு
விருதுநகர்

நகராட்சி சொத்து வரி உயர்வை குறைக்க வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

ராஜபாளையம் நகராட்சி சொத்து வரி உயர்வை குறைக்க ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

ராஜபாளையம் நகராட்சி சொத்து வரி உயர்வை குறைக்க ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கச் செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  
ராஜபாளையம் நகராட்சியில் 2008-இல் சொத்துவரி உயர்த்தப்பட்டது.  அப்போது "ஏ, பி, சி' என 3 பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் சொத்து வரியை உயர்த்தி மாற்றியமைத்தது.
மீண்டும் தற்போது கட்டடங்களின் பரப்பளவின் அடிப்படையில் உயர்த்தி,  மேலும் அரசாணை வெளியிடப்பட்ட 2002 ஆம் ஆண்டில் இருந்து வரி நிலுவையை செலுத்தும்படியும் வற்புறுத்துகின்றனர். இதனால் தொழில் வர்த்தக சங்கத்திடம் வியாபாரிகளும், தொழில் முனைவோரும் புகார் அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சங்கத்தின் துணைத் தலைவர் பத்மநாபன் செயலாளர்,  வெங்கடேஸ்வர ராஜா ஆகியோர் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் ஆணையர், இது அரசு முடிவு இதுகுறித்து எதுவும் செய்ய முடியாது என தெரிவித்ததால் தொழில் வர்த்தக சங்கத்தினர் மேல் நடவடிக்கைக்கு ஆலோசித்து வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →