முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் ஊனமடைந்தவருக்கு ரூ.35.57 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் நிரந்தரமாக 100 சதவீதம் ஊனமுற்றவருக்கு காப்பீட்டு

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் நிரந்தரமாக 100 சதவீதம் ஊனமுற்றவருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.35,57,414 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோரிருமை தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலடிபட்டி, பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி மகன் பழனிச்சாமி (36). பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி ஆட்டோவில் பழைய குளிர்சாதனப் பெட்டியை வாங்குவதற்காக வன்னியம்பட்டி விலக்கு வழியே ஆலங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னாக்குளம் மயானம் அருகே எதிரே வந்த லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பழனிச்சாமிக்கு கழுத்து முதல் இடுப்பு வரை பிளேட் போடப்பட்டுள்ளது. விபத்தில் நிரந்தர 100 சதவீதம் ஊனம் அடைந்தார்.
இதனையடுத்து தனக்கு இழப்பீடு கோரி பழனிச்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.வசந்தி, சிவகாசியில் உள்ள நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் பழனிச்சாமிக்கு ரூ. 35,57,414 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →