முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே ஜீப் மோதி தொழிலாளி சாவு

ராஜபாளையம் அருகே சங்கம்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் ராமர் ( 56). தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

ராஜபாளையம் அருகே சங்கம்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் ராமர் ( 56). தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ராஜபாளையம்- ஆலங்குளம் சார்யியல் உள்ள அய்யனார்புரம் சுடுகாடு அருகே உள்ளது.தனது நிலத்தை பார்வையிட்டு பின்னர் பிரதான சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ராமர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செலப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர்  உயிரிழந்தார். இதுகுறித்து கீழராஜகுலராமன் காவல் ஆய்வாளர்  ஜேசு வழக்குப்பதிவு செய்து ஜீப் ஓட்டுநர் சட்டிகிணற்றை சேர்ந்த ஆனந்த் (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →