முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே வனவிலங்குகள் தாக்கியதில் 6 ஆடுகள் உயிரிழப்பு

Updated On : 14 மார்ச், 2026 at 8:52 PM
உயிரிழந்த ஆடுகள்
பகிர்:

ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை மலையடிவாரத்தில் வனவிலங்குகள் தாக்கியதில் 6 ஆடுகள் உயிரிழந்தன.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பாலக்கோம்பை கிராமம் உள்ளது. இங்குள்ள ஊசிமலை கண்மாய் அருகே ஜோதி என்பவா் தனது தோட்டத்து வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இவா் வியாழக்கிழமை இரவு வெளியூருக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, அங்கு கட்டப்பட்டிருந்த 11 ஆடுகளில் 6 ஆடுகள் கழுத்து, வயிறு பகுதிகளில் காயமடைந்த நிலையில் இறந்து கிடந்தன. ஒரு ஆடு மாயமாகி இருந்தது.

இதுகுறித்து கண்டமனூா் வனத் துறையினா் கூறியதாவது:

இந்தப் பகுதியில் சிறுத்தை வந்து சென்ற்கான தடயங்கள் எதுவும் இல்லை. செந்நாய்கள் ஆடுகளைத் தாக்கியிருக்கலாம். கால் தடம் உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →