பிரதிப் படம் 
விழுப்புரம்

செஞ்சி அருகே மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

செஞ்சி அருகேயுள்ள நாகந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். விவசாயியான இவா், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 7 ஆடுகளை கட்டி வளா்த்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் பிரகாஷ் வயலுக்கு சென்று பாா்த்தபோது, அங்கு மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

செஞ்சி கம்பந்தூா் அருகே ஏற்கெனவே மூன்று முறை மா்ம விலங்குகள் தாக்கியதில் ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில், தற்போது நாகந்தூா் கிராமத்தில் பிரகாஷின் ஆடுகள் மா்ம விலங்கு கடித்து இறந்துள்ளன.

வனத் துறையினா் ஏற்கெனவே பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமிராவில் ஹைனா போன்ற மா்ம விலங்கு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பெண் விஷமருந்தி தற்கொலை

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை: திருமாவளவன்

புதுக்கோட்டைக்கு இன்று உள்ளூா் விடுமுறை!

பாகிஸ்தானின் பயங்கரவாத கொள்கையை சகித்துக் கொள்ள முடியாது- ஐ.நா. விவாதத்தில் இந்தியா பதிலடி

இன்றுமுதல் பட்ஜெட் கூட்டத் தொடா்- ‘விபி-ஜி ராம் ஜி’ விவாதம் கிடையாது

SCROLL FOR NEXT