விருதுநகர்

விருதுநகர்-சிவகாசி சாலையில் பள்ளம்: விபத்தை தடுக்க தடுப்பு வேலி

DIN

விருதுநகர்- சிவகாசி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தின் மீது  எச்சரிக்கை தடுப்பு வேலியை போலீஸார் அமைத்துள்ளனர்.
      சிவகாசிக்கு விருதுநகர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இப்பகுதியில் தயாரிக்கப்படும் பட்டாசு, காலண்டர், நோட்டு ஆகியன தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
    இதன் காரணமாக, இச்சாலையில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. மேலும், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பட்டாசுத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் சிவகாசிக்கு சென்று வருகின்றனர்.
     விருதுநகர் ஆத்துபாலத்திலிருந்து சிவகாசி நான்குவழிச் சாலை மேம்பாலம் வரை இருபுறமும் கடைகள் அதிக அளவில் உள்ளன. இவ்வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளுக்கு முன் மண் போட்டு மேவியதால், சாலை பள்ளமாகி விட்டது. இதனால்,  சில நாள்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக, ஆங்காங்கு இருந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.
  இதில், தொடர்ந்து வாகனங்கள் சென்றதால், அப்பள்ளம் பெரிய பள்ளமாக மாறிவிட்டது. இதனால், இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து படுகயாமடைந்து வந்தனர்.
    அதையடுத்து, பஜார் போலீஸார், அச்சாலையில் உள்ள பள்ளத்தை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதத்லல், தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இதன் காரணமாக, இரு புறமும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
    எனவே, விருதுநகர் ஆத்து பாலத்திருந்து சிவகாசி மேம்பாலம் வரை சாலையை உயர்த்தி, இருபுறமும் மழைநீர் வழிந்தோடும்படி வாருகால் அமைக்க மாவட்ட நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT