விருதுநகர்

பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி ஜன.18-இல் ரயில் மறியல் போராட்டம்: சிஐடியூ அறிவிப்பு

DIN

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் உடனடியாக திறக்கவேண்டும் எனக் கோரி, ஜனவரி 18 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக, சிஐடியூ பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
விருதுநரில் சிஐடியூ - பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி. பாலசுப்பிரமணியன், சிஐடியூ மாவட்டச் செயலர் பி.என். தேவா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
அதில், மத்திய, மாநில அரசுகள் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட அனைத்து பட்டாசு ஆலைகளையும் உடனடியாகத் திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல் வேலையின்றி தவித்து வரும் அனைத்து பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத் தொகையை மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ஆலை நிர்வாகம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 18 ஆம் தேதி
சாத்தூர் மற்றும் திருத்தங்கல்லில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில், பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பி. பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT