விருதுநகர்

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டாசு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

DIN

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
     விருதுநகர் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம். மகாலெட்சுமி தலைமை வகித்தார். இதில், பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து  விலக்கு அளிக்கவேண்டும். கடந்த டிசம்பர் 26 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டாசு ஆலை உரிமையாளர்களால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், குழந்தைகள் கல்வி, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
    இவற்றை வலியுறுத்தி சிவகாசியில் கடையடைப்பு மற்றும் பேரணி நடைபெற்றது. மேலும், தொழிலாளர்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. எனவே, பட்டாசு தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காலதுக்குரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
    இந்தப் போராட்டத்தில் சிஐடியூ மாவட்டத் தலைவர் தேவா உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
சிவகாசி:      சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே , பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அக்கிராமத்தினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், சிவகாசி-சாத்தூர் மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT