விருதுநகர்

விளையாட்டுப் போட்டி: ராஜபாளையம் சிறப்புப் பள்ளி மாணவர்கள் வெற்றி

DIN

மாவட்ட அளவில் நடைபெற்ற மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில், ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றன. இப்போட்டியில், ரிதம் சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 
 இதில், 50 மீட்டர் ஓட்டத்தில் கயல்விழி, 100 மீட்டர் ஓட்டத்தில் அமிர்தலட்சுமி, பந்து எறிதல் போட்டியில் நந்தகுமார், சௌமியா ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.
     நின்று நீளம் தாண்டுதல் பிரிவில், சின்னதம்பி, அமலா ஆகிய இருவரும் மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மென்பந்து எறிதல் போட்டியில் மோகனேஸ்வரி, 50 மீ. ஓட்டத்தில் குருநாதன் ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
   இப் பள்ளி சார்பில் கலந்துகொண்ட மாணவர்களில் 6 பேர் முதலிடமும், 6 பேர் இரண்டாம் இடமும், 2 பேர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ரிதம் சாரிடபிள் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கதிரேசன், செயலர் பால்ராஜ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். ஆசிரியர் ஜீவா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT