பி.எஸ்.குமாரசாமி ராஜா பிறந்தநாள்
சென்னை மாகாண முன்னாள் பிரதமரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும், ராஜபாளையம் காந்தி கலை மன்ற நிறுவனருமான
சென்னை மாகாண முன்னாள் பிரதமரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும், ராஜபாளையம் காந்தி கலை மன்ற நிறுவனருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 120 ஆவது பிறந்தநாள் விழா ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராஜபாளையம் காந்தி கலைமன்ற அறங்காவலர்கள் என்.கே. ஸ்ரீகண்டன்ராஜா, பி.ஏ.பி. ராஜூ , பி.ஆர்.குமாரசாமி ராஜா முன்னிலையில் பெரியோர்கள், நகர் பிரமுகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாலையில் மதுரை தியாகராஜர் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் மு. அருணகிரி தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து காந்தி கலை மன்றம் பி.எஸ்.கே. ருக்மணியம்மாள் கலையரங்கில் நடந்த விழாவில் "வாழ்வாங்கு வாழ்வோம்' என்ற தலைப்பில் சென்னை இசைக்கவி ரமணனின் சொற்பொழிவு நடைபெற்றது. காந்தி கலை மன்ற அறங்காவலர் பி.ஜெ.ராம்குமார் ராஜா வரவேற்றார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.