முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே ஆயத்த ஆடை நிறுவனத்தில் தீ

ராஜபாளையம் அருகே தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீவிபத்து ஏற்பட்டது.

Updated On : 29 மார்ச், 2018 at 8:26 AM
பகிர்:

ராஜபாளையம் அருகே தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீவிபத்து ஏற்பட்டது.
 ராஜபாளையம் அருகே  தளவாய்புரம் அடுத்து நல்லமங்கலத்தில் சிங்கராஜ் என்பவரின் தனியார் ஆயத்த ஆடை நிறுவனம் உள்ளது. இங்கு பெண்களுக்கு தேவையான ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இங்கு மின்கசிவால்  தீ பற்றி எரிந்தது. இதில் உள்ளே இருந்த புதிய ஆடைகள் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
 இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடன் வந்து தீயை அணைத்தனர். தளவாய்புரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.