விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற பெண் பயணிகள் பாதுகாப்பு வாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில், ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் பாதுகாப்பாக செல்வது குறித்து விளக்கப் பட்டது. மேலும், ரயிலில் கொண்டு செல்லும் உடைமைகளைப் பாதுகாப்பாக இருக்கையின் கீழ் வளையத்தில் பூட்டி வைக்கவேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் தரும் உணவுப் பொருள்களை வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கி உண்டால் உடைமைகளை இழக்க நேரிடும்.
ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ கேட்பாரற்றுக் கிடக்கும் பொருள்களை கையில் எடுக்கக் கூடாது. அது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மேலும், ரயிலில் படியில் பயணம் செய்தல் கூடாது என பயணிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இது குறித்த துண்டுப்பிரசுரங்களை பயணிகளுக்கு வழங்கினர். மேலும், உதவி, பாதுகாப்புக்கு 182 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, விருதுநகர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் செய்திருந்தனர்.