முகப்பு
விருதுநகர்

ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 2-வது இடம் பிடித்தவருக்கு பாராட்டு விழா

இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேசிய அளவில் 71 வது இடமும், தமிழக அளவில் 2 வது இடமும் பிடித்த ராஜபாளையத்தை சேர்ந்த மதுபாலனுக்கு ஊர் பொது மக்கள் சார்பில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை

Updated On : 15 மே, 2018 at 12:33 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேசிய அளவில் 71 வது இடமும், தமிழக அளவில் 2 வது இடமும் பிடித்த ராஜபாளையத்தை சேர்ந்த மதுபாலனுக்கு ஊர் பொது மக்கள் சார்பில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங் கொண்டானை சேர்ந்த லிங்கம் மகன் மதுபாலன். அங்குள்ள ஊர் பொது திடலில் நடைபெற்ற பாராட்டு விழாவில், அப் பகுதியை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ எஸ்.தங்கப் பாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ்,அனைத்து சமுதாய தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும், மதுபாலனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுபாலன் அளித்த பேட்டி:
கிராமத்தினர் அனைவரும் இணைந்து பாராட்டு விழா நடத்துவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பலரின் கனவான ஐ.ஏ.எஸ் எனக்கு நனவாகி உள்ளது. பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பணியில் நேர்மையாகவும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நல்லது செய்ய விரும்புகிறேன்.
மேலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என பல இளைஞர்கள் கனவு காணுகிறார்கள். தேர்வுக்கு குறைந்தது 2 வருடங்கள் படிக்க வேண்டும். 1 வருடம் தேர்வு எழுத வேண்டும். 3 வருடங்கள் கடுமையாக உழைப்பு, புரிதல், திட்டமிடல் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.