விருதுநகர்

சட்டப் பணிகள் ஆணைக் குழு முயற்சியால் பழங்குடியினருக்கு விலையில்லா பசுக்கள்

DIN

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் முயற்சியால் பழங்குடியினர் 13 பேருக்கு விலையில்லா பசுக்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், விலையில்லா பசுக்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த மனுக்களை ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பரிசீலித்து, ஆண்டாள் கோயில் கோசாலையில் இருந்து பசுக்களை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி கோரினர்.
 ஆட்சியர் அனுமதி அளித்ததன்பேரில், மனு அளித்த 13 பேருக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆ.முத்துசாரதா, செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா ஆகியோர் வியாழக்கிழமை விலையில்லா பசுக்களை வழங்கினர். 
 அவற்றைப் பெற்றுக்கொண்ட பழங்குடியினர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கும் நடவடிக்கை எடுத்த நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆண்டாள் கோயில் தக்கார் கி.ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT