முகப்பு
விருதுநகர்

சாத்தூர் ரயில் நிலையச் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பு: போலீஸார் கண்காணிக்க வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ரயில் நிலையச் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதால், காவல்துறையினர் ரோந்துப்

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:18 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ரயில் நிலையச் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதால், காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையில் வங்கிகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. வாழவந்தாள்புரம், சாமியார்காலனி, இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியே தான் செல்ல முடியும். இதன் காரணமாக இச்சாலையில் தினம் ஏராளமானோர் பல்வேறு பணிகள் நிமித்தமாக சென்று வருகின்றனர்.
மேலும், ரயில் நிலையத்துக்கு உள்ளூர், வெளியூர் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். இந்நிலையில், மாலை 6 மணிக்கு மேல், சாலையோரத்திலும், ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களிலும் மது அருந்துதல், மது விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.
இதனால், ரயில் பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சமூக விரோத செயல்கள் மட்டுமின்றி திருட்டு, வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகிறது. இப்பகுதியில் ஆண்கள் கூட தனியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சாத்தூர் ரயில் 
நிலையச் சாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, சமூக விரோத செயல்களை தடுத்த நிறுத்த வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.